OUR CLIENTS
டிரம்ப் நிர்வாகத்தில் 2-ஆவது இந்திய-அமெரிக்கர்: மருத்துவப் பிரிவுத் தலைவராக சீமா வர்மா நியமனம்
டிரம்ப் நிர்வாகத்தில் 2-ஆவது இந்திய-அமெரிக்கர்: மருத்துவப் பிரிவுத் தலைவராக சீமா வர்மா நியமனம் Posted on 16-Mar-2017 டிரம்ப் நிர்வாகத்தில் 2-ஆவது இந்திய-அமெரிக்கர்: மருத்துவப் பிரிவுத் தலைவராக சீமா வர்மா நியமனம்

வாஷிங்டன், மார்ச் 16-
அமெரிக்க அரசின் மருத்துவ சுகாதாரத் துறையில், முக்கியத்துவம் வாய்ந்தப் பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில், முக்கியப் பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது இந்திய வம்சாளிப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிபர் மாளிகையில் துணை அதிபர் மைக் பென்ஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆலோசகரான சீமா வர்மாவை, முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி மையத்தின் தலைவராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார் என்றார் அவர்.

13 கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் அந்த மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், டிரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் இரண்டாவது இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை சீமா வர்மா பெற்றுள்ளார்.

ஏற்கெனவே, டிரம்ப் நிர்வாகத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Label