OUR CLIENTS
அணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசும் ஆதரவு
அணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசும் ஆதரவு Posted on 16-Mar-2017 அணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசும் ஆதரவு

வாஷிங்டன், மார்ச் 16-
அணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா விரைவில் உறுப்பினர் ஆவதற்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து புதன்கிழமை கூறியதாவது: என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா முழு உறுப்பினராக இணைவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த முயற்சிக்கு உத்வேகம் கொடுக்க, இந்தியாவுடன் இணைந்து பிற உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராக இணையும் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

’அமெரிக்கர்களின் நலனுக்கே முக்கியத்துவம்' என்ற அறிவிப்புடன் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபர் ஆகியிருப்பதால், அவரது ஆட்சியில் இந்தியாவுடனான நட்புறவில் மாற்றம் நிகழலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளரின் இந்தக் கருத்து, அமெரிக்க அரசின் முந்தைய கொள்கையில் மாற்றம் இல்லை என்பதை உணர்த்துகிறது.

Label