OUR CLIENTS
2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் : மத்திய அமைச்ரிசரிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்
2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் : மத்திய அமைச்ரிசரிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல் Posted on 18-Mar-2017 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் : மத்திய அமைச்ரிசரிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 18-
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார் தில்லியில் பாராளுமன்ற அலுவலகத்தில் மத்திய மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினர்.

உதய் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் மின்வாரியத்தின் நிதிச்சுமையை ஏற்றுக்கொள்வதற்காக மாநில அரசு வெளியிடும் கடன் பத்திரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 4,000 மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் மிக உயர் அனல் மின் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை குறைக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஒப்பந்தப்புள்ளிகளை உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்தும் வாய்ப்பையும் உள்ளடக்கி விரைவில் இறுதி செய்திட மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநில அரசு கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டுவர எடுத்துக்கொண்ட அசாதாரண முயற்சிகளை கருத்தில் கொண்டு உற்பத்தியாக உள்ள மொத்த உற்பத்தி திறனான 2,000 மெகாவாட்டையும் தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வார்தா புயல்
வார்தா புயலினால், சென்னை பெரு நகரத்தில் உள்ள மின் கட்டமைப்பு மிகவும் சேதம் அடைந்ததால் அதனை உடனடியாக மறு சீரமைக்க ரூ.1,093.27 கோடி கோரப்பட்டது. மேலும், சென்னை பெருநகரமானது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்கும் பொருட்டு கீழ்கண்ட நிலையான மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாதாரண மின்தூண் பெட்டிகளை உயர் சிதைவு திறன் எரியிழை கட்டுப்பாட்டுடன் கூடிய, லேசான எக்கு உலோக உறை கொண்ட ஆறு வழி மின் தூண் பெட்டிகளாக மாற்றுதல். சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள மேல்நிலை மின் பாதைகளை பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.17,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெருநகரத்திற்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் விதமாக நிரந்தர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அந்த தொகையை மானியமாகவோ பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் மென்கடனாகவோ அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பசுமை மின் வழித்தடம்
தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரத்தினை தேவைப்படும் பிற மாநிலங்களுக்கு விற்பதற்கு ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த கேட்டுக்கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆற்றலை அதிக அளவிற்கு ஒருங்கிணைப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் தண்டணை விதிக்கப்படுவது நியாயமற்றதாகும். மேலும் மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கைக்கு மாறானது ஆகும். தமிழ்நாடு போன்ற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆற்றல் அதிகமுள்ள மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை அதிக அளவிற்கு ஒருங்கிணைப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் தண்டிக்கப்படக்கூடாது. அதனால் காற்றாலைப் பருவத்தில் அதிர்வெண்ணுடன் இணைந்த தண்டனையை ரத்து செய்யும்படி மத்தியமந்திரியை அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label