OUR CLIENTS
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அதிகாரபூர்வ அறிவிப்பு Posted on 18-Mar-2017 ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை, மார்ச் 18-
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இ.மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பில் மதிவாணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தொகுதியில் தேசிய கட்சியான பா.ஜனதாவும் போட்டியிடுகிறது. வேட்பாளர்களாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்களை பா.ஜனதா மேலிடம் பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுவார் என்று நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பா.ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா முழுவதும் மேலும் 8 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களையும் அவர் அறிவித்து உள்ளார். 

Label