OUR CLIENTS
ரூ.100–க்குள் பாக்கி வைத்துள்ள 21.54 லட்சம் பேரின் வருமான வரி தள்ளுபடி
ரூ.100–க்குள் பாக்கி வைத்துள்ள 21.54 லட்சம் பேரின் வருமான வரி தள்ளுபடி Posted on 18-Mar-2017 ரூ.100–க்குள் பாக்கி வைத்துள்ள 21.54 லட்சம் பேரின் வருமான வரி தள்ளுபடி

புதுதில்லி, மார்ச் 18-
பாராளுமன்றத்தில், வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்கள் தொடர்பான ஒரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க அமைச்சர்  சந்தோஷ்குமார் கங்குவார் எழுத்துமூலம் நேற்று பதில் அளித்தார். அந்தப் பதிலில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

* ரூ.100 அல்லது அதற்கு குறைவாக வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 54 ஆயிரம். அவர்களின் வருமான வரி பாக்கி தள்ளுபடி செய்யப்படுகிறது.

* இதன்மூலம் தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.

* மிகக்குறைவான தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் அரசுக்கு பெரிதான அளவில் வருவாய் இழப்பு இல்லை.

* குறைவான தொகையை பாக்கியாக வைத்துள்ள 21 லட்சத்து 54 ஆயிரம் பேரின் வருமான வரி பாக்கியை தள்ளுபடி செய்வதால், அவர்களது கணக்குகளை பராமரிக்கிற வேலைப்பளு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label