OUR CLIENTS
ராமர் கோவில் விவகாரத்தில் சட்டரீதியிலான தீர்வு: மத்திய அமைச்சர் பஸ்வான்
ராமர் கோவில் விவகாரத்தில் சட்டரீதியிலான தீர்வு: மத்திய அமைச்சர் பஸ்வான் Posted on 20-Mar-2017 ராமர் கோவில் விவகாரத்தில் சட்டரீதியிலான தீர்வு: மத்திய அமைச்சர் பஸ்வான்

பாட்னா, மார்ச் 20-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் உள்ள பிரச்சனைக்கு சட்டரீதியில் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் தீவிர இந்துத்துவவாதியான யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதல்மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை அம்மாநில கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ,” உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி ராமர் கோவில் விவகாரம் குறித்தோ, பொது சிவில் சட்டம் குறித்தோ பேசவில்லை. வளர்ச்சி மற்றும் மாநிலத்தை முன்னேற்றுவது குறித்து மட்டும் தான் பேசினார். ராமர் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை சட்டரீதியிலான தீர்வு கானவே அரசு விரும்புகிறது” எனக் கூறினார்.

மேலும் ,” 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரச்சாரம் செய்வார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பீகாரில் தற்போது தேர்தல் வைத்தாலும் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்தார்.

Label