OUR CLIENTS
பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா? - நாளை முடிவு தெரியும்
பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா? - நாளை முடிவு தெரியும் Posted on 21-Mar-2017 பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா? - நாளை முடிவு தெரியும்

சென்னை, மார்ச் 21
ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக இந்த நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் உள்ள 2141 உறுப்பினர்களில் 2090 பேர் இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலா நியமனத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியினர் தலைமை தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றதில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா? என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக சசிகலா, ஓ.பி.எஸ். இரு தரப்பினரும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் கமி‌ஷனிடம் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தேர்தல் கமி‌ஷன் நாளை (புதன்கிழமை) விசாரணை நடத்தி தனது தீர்ப்பை வெளியிட உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி அ.தி.மு.க. சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் சசிகலாவுக்கு சாதகமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக மூன்று சட்ட விதிகள் சசிகலா பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலாவதாக அ.தி.மு.க. சட்ட விதி 20(2)ஐ சொல்கிறார்கள். இந்த சட்ட விதியின்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர், கட்சியின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஆனால் சசிகலா அப்படி தேர்வு செய்யப்படவில்லை.

இந்த சட்டப்பிரிவு தொடர்பான கேள்விக்கு சசிகலா அளித்துள்ள பதிலில், “கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரது விருப்பத்தையும் பிரதிபலிக்கும் அமைப்பாக அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளது. எனவே பொதுக்குழு ஒப்புதல் போதுமானது” என்று கூறியுள்ளார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க.வின் சட்ட விதி 43-ல் கூறப்பட்டு இருக்கும் அம்சத்தை சுட்டிக் காட்டி தெளிவுபடுத்தி உள்ளனர். இந்த 43-வது சட்ட திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சட்ட விதியில் கூறப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க. கட்சி சட்ட விதிகளை திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ, புதிய விதிகளை சேர்க்கவோ பொதுக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு விதியை மட்டும் பொதுக் குழுவால் திருத்த முடியாது. அது கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கொண்டிருப்பதால் அந்த விதியை மட்டும் மாற்றும் அதிகாரம் கிடையாது.

இவ்வாறு அந்த 43-வது சட்ட திருத்த விதியில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட விதியும் சசிகலாவுக்கு சாதகமாக இல்லை.

இரண்டாவதாக கட்சி சட்ட விதி 30(5)ம் சசிகலாவுக்கு எதிராக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சட்ட விதியில் கூறப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க. கட்சி நிர்வாக அமைப்பு பதவிகளில் அமர போட்டியிட விரும்புபவர்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அ.தி.மு.க. உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் அல்லது பொதுச்செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களை கட்சி உறுப்பினராக கருத முடியாது.

அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டாலும், அவர்கள் எந்த தேதியில் கட்சியில் சேர்க்கப்பட்டார்களோ.... அந்த தேதியில் இருந்துதான் அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 5 ஆண்டுகள் கழித்த பிறகே எந்த நிர்வாக பதவிக்கும் போட்டியிட முடியும். இவ்வாறு அந்த சட்ட விதியில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அறிவித்தார். சசிகலா, தினகரனுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.

சசிகலா கடும் போராட்டத்துக்குப் பிறகு “அரசியலுக்கு வர மாட்டேன்” என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இதனால் ஜெயலலிதா மனம் இறங்கி 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார்.

அதன்படி பார்த்தால் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி ஆகவில்லை. அதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ளது. எனவே 5 ஆண்டுகள் முழுமையாக உறுப்பினராக இல்லாத சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடியாது என்று சொல்கிறார்கள்.

சட்ட விதி 30(5) தனக்கு எதிராக இருப்பதாக கூறப்படுவது பற்றி சசிகலா புதுவிதமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட போது, தன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விட்ட தால், ஏற்கனவே உள்ள உறுப்பினர் காலம் இடையூறு இல்லாமல் தொடர்வதாக கூறியுள்ளார். அதாவது ஒழுங்கு நடவடிக்கை ரத்து ஆகி விட்டதால், நீக்கப்பட்டிருந்த காலமும் தானாக ரத்து ஆகி விட்டதாக சசிகலா தன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர், 2012-ம் ஆண்டு சசிகலா மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போது எதுவும் திரும்பப் பெறப்படவில்லை. எனவே நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். அந்த காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக சசிகலா தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள பதிலில், “ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கட்சி தலைமைக் கழக நிர்வாகிகளால், பொதுச்செயலாளருக்குரிய பணிகளை ஒருங்கிணைந்து செய்ய முடியாததால் பொதுச்செயலாளர் நியமனம் அவசியமாகியது என்று கூறியுள்ளார்.

இதை ஓ.பி.எஸ். அணியினர், அ.தி.மு.க. சட்ட விதி 20(5)ஐ சுட்டிக் காட்டி நிராகரித்துள்ளனர். அந்த சட்ட விதியில் கூறப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி காலியாகும் பட்சத்தில் சட்ட விதியில் கூறப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி காலியாகும் பட்சத்தில், அவரால் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் பொதுச்செயலாளருக்குரிய பணிகளை செய்ய வேண்டும். புதிய பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்கப்படும் வரை தலைமை கழக நிர்வாகிகளுக்கு இந்த பொறுப்புள்ளது. இவ்வாறு அந்த சட்ட விதியில் கூறப்பட்டுள்ளது.

Label