OUR CLIENTS
‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை Posted on 22-Mar-2017 ‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

சென்னை, மார்ச் 23-
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: தேர்தல் கமி‌ஷன் நடத்தும் விசாரணையில் ‘இரட்டை இலை’ சின்னம் உங்களுக்கு கிடைக்கும் என்று எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

பதில்: அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 95 சதவீதம் பேரும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஏற்கனவே எங்களிடம் இருக்கும் ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்ந்து எங்களுக்கே ஒதுக்கப்படும்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 45 லட்சம் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் 95 சதவீதம் ஆதரவு என்று சொல்கிறீர்களே?

பதில்: தேர்தல் கமி‌ஷன் என்பது பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தான் முடிவு செய்யும்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், ‘நான் இந்த மண்ணின் மைந்தன். வெற்றி பெறுவேன்’ என்கிறாரே?

பதில்: நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். நாங்கள் பாகிஸ்தானில் இருந்தோ, ஆப்கானிஸ்தானில் இருந்தோ வரவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து அங்கு வெற்றிகரமாக சிறப்பாக செயல்பட மக்கள் நிச்சயம் எனக்கு தான் வாக்களிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

கேள்வி: அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருக்கிறாரே?

பதில்: ஊழலின் ஒட்டுமொத்த உருவமே தி.மு.க. தான். அதன் செயல் தலைவர் சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கேள்வி: பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. ரூ.10 ஆயிரமும், தி.மு.க. ரூ.5 ஆயிரமும் கொடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளாரே?

பதில்: நீங்கள்(பத்திரிகையாளர்கள்) சென்று சோதனை செய்யுங்கள். கொடுத்தால் நீங்களும் வாங்கி கொள்ளுங்கள். 

கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

பதில்: நிச்சயம் அவர் தோற்கப்போகிறார். நாங்கள் தான் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற போகிறோம். எங்களை பற்றி பேசுவதால் தி.மு.க.வுக்கு போகிற வாக்குகள் சிதறி பா.ஜ.க.வுக்கு வரலாம் என்று நினைத்து அவர் பேசி இருக்கலாம். இது அவருடைய நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Label