OUR CLIENTS
மதுசூதனனுக்கு கொலைமிரட்டல் பாதுகாப்பு கேட்டு, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு
மதுசூதனனுக்கு கொலைமிரட்டல் பாதுகாப்பு கேட்டு, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு Posted on 22-Mar-2017 மதுசூதனனுக்கு கொலைமிரட்டல் பாதுகாப்பு கேட்டு, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு

சென்னை, மார்ச் 22-
ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் கையெழுத்திட்ட மனு டி.ஜி.பி. அலுவலகத்திலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் நேற்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக நான் பணியாற்றி வருகிறேன். தற்போது, சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, அ.தி.மு.க.வை காப்பாற்ற முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராடி வருகிறோம். இதனால் எங்களுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தேர்தலில் போட்டியிட்டால் என்னை தீர்த்துக்கட்டுவதாக மிரட்டல்கள் வருகிறது. நான் இதை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறேன்.

20–ந் தேதி காலை 6 மணி அளவில், அறிமுகம் இல்லாத சிலர் என் வீட்டை நோட்டமிட்டு சுற்றி வந்தார்கள். அவர்கள் தோற்றத்தை பார்க்கும் போது கூலிப்படையினர் போல் தோன்றியது. எனது வீட்டில் இருந்த ராஜேஷ் என்பவரை அனுப்பி அவர்களை யார்? என்று விசாரிக்க சொன்னேன்.

வெளியில் நிற்கும் நபர்கள், உருட்டுக்கட்டைகளால் தன்னை தாக்க முயன்றார்கள் என்று ராஜேஷ் கூறினார். மேலும் அவர்கள் ராஜேசிடம், ‘டி.டி.வி.தினகரனுக்கு எதிராக மதுசூதனன் போட்டியிடக்கூடாது என்றும், அவ்வாறு போட்டியிட்டால் மதுசூதனனை தீர்த்துக்கட்டுவோம் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை போட்டியிடவிடாமல் தடுக்கும் முயற்சிகள் நடக்கிறது. என்னை கொலை செய்து இடைத்தேர்தலை தள்ளிவைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

எனவே என் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் எனக்கு பாதுகாப்புக்காக அமர்த்த வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூலிப்படையினரால் மிரட்டப்பட்ட ராஜேசும் நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் மனு அளித்தார். அதில், ‘வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளராக பணியாற்றும் நான், மதுசூதனனுக்கு மாற்று வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியில் மனுதாக்கல் செய்ய உள்ளேன். 20–ந் தேதி மதுசூதனன் வீட்டை நோட்டமிட்டவர்கள் என்னை உருட்டுக்கட்டையால் தாக்க முயற்சி செய்தனர். எனவே எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Label