OUR CLIENTS
தீபாவை பின்னால் இருந்து இயக்குவது யார்?
தீபாவை பின்னால் இருந்து இயக்குவது யார்? Posted on 22-Mar-2017 தீபாவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

சென்னை, மார்ச் 22-
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சில தீய சக்திகள் சூழ்ந்துகொண்டு இயக்குவதாக அவரின் கணவர் மாதவன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மாதவன் கூறியதாவது, தீபா பேரவையில் தற்போது ஒருவர்கூட இல்லை. காரணம் நிர்வாகம் சரியில்லை.

தீபா பேரவை ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் தீபாவை முதலமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை.

தீபாவுக்கு அவரை சுற்றியும் வெளியிலும் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அவரை தீய சக்திகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன.

அந்த தீய சக்தியை இன்னொரு தீய சக்தி இயக்குகிறது. அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் இயக்குகிறார்கள். சசிகலா மற்றும் தீபாவின் சகோதரர் தீபக்கின் நண்பர் ராஜா உள்ளிட்டோர் இயக்குகின்றனர்.

தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகு நான் எனது கட்சியின் பெயரை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

Label