OUR CLIENTS
இரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது : டிடிவி தினகரன்
இரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது : டிடிவி தினகரன் Posted on 23-Mar-2017 இரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது : டிடிவி தினகரன்

சென்னை, மார்ச் 23-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் நாளை இருதரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும் என்றும் நாளை காலை 10 மணிக்குள் இருதரப்பினரும் பட்டியலில் இருந்து சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.  இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் வெற்றி பெறுவோம். இரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. தேர்தல் ஆணையத்தின் முடிவு இதுபோன்று இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம். தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். தேர்தல் ஆணைய தீர்ப்பால் பின்னடைவு இல்லை அனுபவம் தான். எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் நிச்சயம் வெற்றி பெறுவேன். யாருடைய தலையீடு இருந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. 

ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் சின்னத்தை தேர்வு செய்வேன். நிச்சயம் போராட்டத்தில் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கம் சட்டப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label