OUR CLIENTS
இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அளிக்கிறது : ஓ.பன்னீர்செல்வம்
இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அளிக்கிறது : ஓ.பன்னீர்செல்வம் Posted on 23-Mar-2017 இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அளிக்கிறது : ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, மார்ச் 23-
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு புரட்சித்தலைவர் உருவாக்கிய, புரட்சித் தலைவியின் தொடர் வெற்றிச்சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத் தியுள்ளது. இரட்டைஇலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளோம்.  

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இரட்டைஇலை சின்னத்தையும் தமிழ் மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றகழகத் தொண்டர் களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label