OUR CLIENTS
‘அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’ ஜெ.தீபா பேட்டி
‘அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’ ஜெ.தீபா பேட்டி Posted on 24-Mar-2017 ‘அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’ ஜெ.தீபா பேட்டி

சென்னை, மார்ச் 24-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று மதியம் 1.50 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நிர்வாகிகள் ராஜா, ஈ.சி.ஆர். என்.ராமச்சந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீபா நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட இந்த தொகுதி மக்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜெயலலிதாவின் வாரிசு யார்? என்பதை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இந்த தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள். இந்த தேர்தல் வெற்றி என் வாழ்க்கையில் ஒரு சரித்திரமாக அமையும்.

அ.தி.மு.க.வுக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது நான் என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையை ஏற்று ஜெயலலிதாவின் வழியில் கட்சியை கொண்டு செல்வேன்.

ஆர்.கே.நகர் மக்களிடம் கலந்து பேசினேன். ஜெயலலிதா அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். தேர்தல் கமிஷன் என்ன சின்னம் ஒதுக்குகிறதோ?, அதில் போட்டியிடுவேன்.

உரிய நேரத்தில் என்னை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. பிற்பகல் 1.30 மணிக்கு வர சொன்னார்கள். ஆனால் அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். எனக்கு மாற்று வேட்பாளர்கள் என்னுடைய உண்மையான தொண்டர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Label