OUR CLIENTS
வறுத்தெடுத்த ஆர்கே நகர் மக்கள்: தப்பித்து ஓடிய தினகரன்
வறுத்தெடுத்த ஆர்கே நகர் மக்கள்: தப்பித்து ஓடிய தினகரன் Posted on 28-Mar-2017 வறுத்தெடுத்த ஆர்கே நகர் மக்கள்: தப்பித்து ஓடிய தினகரன்

சென்னை, மார்ச் 28-
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எழில் நகரில் ஓட்டு கேட்டு சென்ற போது, அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஜெயலலிதாவின் சொந்த தொகுதியாக இருந்தும், ஆர்.கே.நகரில், எந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை.

பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. மீண்டும் எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என கேள்விகளால் வறுத்தெடுத்தனர்.

உடனே, சுதாரித்த கட்சிநிர்வாகிகள், 'உங்கள் ஓட்டு தொப்பிக்கே' என கோஷமிட்டப்படி, அவர்களை பேச விடாமல் தடுத்தனர். உடனே, பிரசார வாகனத்தில் ஏற முயன்ற தினகரனை, ஆரத்தி எடுப்பதற்காக அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்திருந்த பெண்களும், ஜெயலலிதாவி இருந்த வரை, எதுவும் நடக்கவில்லை.

குப்பை மேடு அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதை அகற்றவில்லை. நீங்கள் எந்த முகத்தோடு வருகிறீர்கள் என கேள்வி கேட்க தொடங்கினர்.

இதற்கு, பதிலளிக்க முடியாமல் தடுமாறிய தினகரன், அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

அடுத்த தெருவிற்கு சென்ற தினகரன், ஜெயலலிதாவிடம் 57 ஆயிரம் மனுக்கள், வீடு கேட்டு கொடுக்கப்பட்டு உள்ளன. அதை, நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி தருவோம். கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.

இங்கு, சுற்றுச்சூழலை பாதிக்காத, நவீன குப்பை கிடங்கு அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Label