OUR CLIENTS
டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யலாம் - அமெரிக்க அதிகாரி தகவல்
டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யலாம் - அமெரிக்க அதிகாரி தகவல் Posted on 28-Mar-2017 டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யலாம் - அமெரிக்க அதிகாரி தகவல்

வாஷிங்டன், மார்ச் 28-
அமெரிக்க - இந்தியாவும் தங்களுக்கு இடையிலான உறவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியையும், எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதையும் முக்கிய அம்சமாக இடம் பெறச் செய்யலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அமெரிக்க அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

புதிய அதிபர் டிரம்ப் முந்தைய அதிபர் ஒபாமாவின் எரிசக்தி தொடர்பான கொள்கைகளிலிருந்து விலகிச் செல்ல விரும்பலாம் என்றும், பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக வெப்பமடைதல் தொடர்பான மாநாட்டின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த முனைய மாட்டார் என்றே தோன்றுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார். இதன் மூலம் இந்தியாவிற்கான எரிவாயு ஏற்றுமதி தடையின்றி நடைபெறலாம் என்று நம்பப்படுகிறது. எரிசக்தித் துறையில் தாராளமாக செயல்பட ஏதுவாக அதிபர் தனியாக ஒரு ஆணையை பிறப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இம்மாதம் இந்திய அமைச்சர் பிரதான் அமெரிக்காவிற்கு சென்ற போது அமெரிக்க எரிசக்தி செயலாளர் ரிக்கி பெர்ரியை சந்தித்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியா அமெரிக்காவில் கொண்டு வரப்படும் எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்யவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாக தெரிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளரும் போது எரிசக்தியின் தேவை அதிகரிக்கும் என்றும் அதற்கு அமெரிக்காவின் உதவி தேவை என்பதால் எரிசக்தி இரு நாட்டு உறவில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய அரசின் எரிசக்திக் கொள்கைகள் விரிவானதாகவும் பழைய சட்டங்களை சீராய்வு செய்யக்கூடியதாகவும் இருக்கும் என்கிறார் அமெரிக்க அதிகாரி. 

Label