OUR CLIENTS
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் பன்னீர் பதிலடி!
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் பன்னீர் பதிலடி! Posted on 30-Mar-2017 ஸ்டாலினுக்கு தோல்வி பயம் பன்னீர் பதிலடி!

சென்னை, மார்ச் 30-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெ., சமாதியில் முழுவதும் கூறிவிட்டேன்.. கோடை வெவிலின் வெப்பம் தாங்காமல் ஸ்டாலின் பேசி உள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது தேவையான வசதி இல்லையென்றால் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என தம்பி துரையிடம் சொன்னேன். சசி குடும்பத்திடம் சொல்ல சொன்னேன். அவரும் கூறினார். அதற்கு, இங்கு சிகிச்சை நல்ல முறையில் உள்ளது .வெளிநாடு தேவையில்லை என சசிகலா சொன்னதாக, தம்பிதுரை என்னிடம் கூறினார். விஜயபாஸ்கரிடம், ஜெ.,வுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து அழைத்து சென்றால் நல்லது. மாறாக ஏதாவது ஆனால், கட்சிகாரர்கள் நமது வீட்டை சூறையாடி விடுவார்கள் என அவரிடம் கூறினேன். அவரும் சசியிடம் இதனை தெரிவித்தார். 

விசாரணை கமிஷன் அமைத்து உண்மை வெளிக்கொண்டு வந்தால் மக்களுக்கு திருப்தியாக இருக்கும் . முதல்வராக இருந்தபோது விசாரணை கமிஷன் வைக்க வேண்டுமென கூறினேன். மூன்றாம் முறையாக முதல்வராக ஆன பிறகு தமக்கு ஏற்பட்ட அவமானத்தை தான் நான் 10 சதவீதம் கூறினேன். 90 சதவீதத்தை புதைத்து விட்டேன்.

அரசியல் லாபத்திற்கு ஸ்டாலின் கேள்விக்கு பதில் தர முடியாது.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்தள்ளது.எந்த தேர்தலிலும் திமுக படுதோல்வியடையும்.அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை. மக்கள் தெளிவாக உள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கின்னர்.

தினகரன் ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்படுவார்.டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையான ஒன்று. அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள் ; அவரது கனவு சாத்தியமற்றது . பா.ஜ.,வின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Label