OUR CLIENTS
ஆர்.கே நகரில் ஜெயிக்க டிடிவி தினகரனின் அதிரடி திட்டம்: ஓ.பி.எஸ் அதிர்ச்சி
ஆர்.கே நகரில் ஜெயிக்க டிடிவி தினகரனின் அதிரடி திட்டம்: ஓ.பி.எஸ் அதிர்ச்சி Posted on 01-Apr-2017 ஆர்.கே நகரில் ஜெயிக்க டிடிவி தினகரனின் அதிரடி திட்டம்: ஓ.பி.எஸ் அதிர்ச்சி

சென்னை, ஏப். 1-
ஆர்.கே நகரில் மக்களை கவர்ந்திழுக்க வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன்களை தினகரனே கட்டிவிடுவதாக மக்களிடம் உறுதியளித்துள்ளாராம்.

ஆர்.கே நகர் தொகுதியில் நிற்கும் தினகரன் ஓ.பி.எஸ் அணி, திமுக என பல முனை போட்டி நிலவுவதால் எப்படியாவது ஜெயிக்க பல திட்டங்களை வகுத்து வருகிறார்.

அவர் சார்பில் மக்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டு வருகிறது. சற்று முன்னர் கூட தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

இந்நிலையில், பெண்கள் அதிகம் இருக்கும் ஆர்.கே நகரில், சுய உதவி குழுக்கள் மூலம் அதிக கடன் தொகையை வங்கியிலிருந்து குறைந்து வட்டிக்கு வாங்கி தருவேன் என தினகரன் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே வாங்கிய கடன்களை நான் கட்டி விடுவேன் எனவும் கூறியுள்ளாராம், இதனால் இதர கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.

Label