OUR CLIENTS
அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை அனுமதிப்பது பெரும் தவறு: இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை
அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை அனுமதிப்பது பெரும் தவறு: இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை Posted on 01-Apr-2017 அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை அனுமதிப்பது பெரும் தவறு: இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பெய்ஜிங், ஏப். 1-
திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சீனா இந்தியாவுக்கு இந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு காங் கூறுகையில், “ அருணாச்சல பிரதேசத்துக்கு தலாய் லாமாவை செல்ல இந்தியா அனுமதித்தால் இரு தரப்புக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்படும். தீபெத் விவகாரத்தில் இந்தியா தனது அரசியல் வாக்குறுதிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.  சீனா-இந்தியா எல்லையின் கிழக்கு பகுதியை பொறுத்தவரை சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதுமாகும்.

இந்த பிராந்தியத்துடன் தொடர்புடைய பகுதிகளில் தலாய்லாமா தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எங்களது கவலைகளையும் இந்திய தரப்பிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா தனது அரசியல் வாக்குறுதிகளை உறுதியாக பின்பற்றி மேலும் சிக்கலை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா தவிர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Label