OUR CLIENTS
பீதியில் உறைந்த தினகரன்!
பீதியில் உறைந்த தினகரன்! Posted on 04-Apr-2017 பீதியில் உறைந்த தினகரன்!

சென்னை, ஏப். 4-
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என உத்தரவாதம் கொடுத்தால் அணி மாற நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமைச்சர்கள் பலரும் உத்தரவாதம் கொடுத்து வரும் தகவலால் தினகரனை பெரும் பீதியில் உறைந்துள்ளார்.

ஆர்கே நகர் தேர்தலில் எப்படியும் வென்று முதல்வர் நாற்காலியில் அமர பெரும் முயர்சி செய்துக் கொண்டு இருக்கிறார் தினகரன். அவரது ஆதரவாளர்களோ, தினகரன் ஜெயித்தாலும் முதல்வராக மாட்டார் என்கின்றனர்.

ஓபிஎஸ் அணியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர் நிச்சயம் இந்த முறை ஓபிஎஸ் ஆட்சி அமைப்பார் என்றும் பல சம்பவங்களை சுட்டிக்காட்டியும் நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள். அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ் அணியுடன் பேசுவதை உளவுத்துறையில் உள்ளவர்கள் தினகரன் பார்வைக்கு கொண்டு போயுள்ளன.

அவர்களது தொலைபேசி உரையாடல்களை கேட்ட தினகரன் ரொம்பவே பீதியடைந்துள்ளார்.

Label