OUR CLIENTS
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல்லால் ஆபத்து: எச்சரிக்கும் நாசா
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல்லால் ஆபத்து: எச்சரிக்கும் நாசா Posted on 04-Apr-2017 பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல்லால் ஆபத்து: எச்சரிக்கும் நாசா

வாஷிங்டன், ஏப். 4-
மிகப் பெரிய அளவிலான எரிகல் ஒன்று பூமிக்கு அருகே வர இருப்பதாகவும் இது பூமியின் மீது மோதும் அபாயம் இருப்பதாகவும் நாசா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹலீயகாலா எரிமலை பகுதியில் யான்-ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த டெலஸ்கோப்பானது கடந்த மாதம் 25 ஆம் தேதி பதிவு செய்த அபூர்வ புகைப்படம் ஒன்று நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதில் பூமியை நோக்கி 26 அடி அகலம் கொண்ட ஒரு எரிகல்லானது பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தற்போது பூமிக்கு அருகே 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த எரிகல்லினால் பூமிக்கோ அல்லது சந்திரனுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிபட தெரிவிக்க முடியவில்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் குறித்த எரிகல்லை டெலஸ்கோப் இன்றியும் பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Label