OUR CLIENTS
ஆர்.கே.நகர் தேர்தல்... மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து சென்று பிரசாரம்!
ஆர்.கே.நகர் தேர்தல்... மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து சென்று பிரசாரம்! Posted on 04-Apr-2017 ஆர்.கே.நகர் தேர்தல்... மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து சென்று பிரசாரம்!

சென்னை, ஏப். 4-
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் பொது மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் கடந்த 28-ந்தேதி தேர்தல் பிரசார மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குச்சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதி காசிமேட்டு சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினிடம் போது இல்லத் தரசிகள் ‘‘எங்கள் வாக்கு உதய சூரியனுக்குத்தான்’’ என்று சொல்லி மு.க.ஸ்டாலினின் கரத்தைப் பிடித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதே போன்று சாலையில் சென்ற இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும், மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்று எங்கள் வாக்கு உதயசூரியனுக்குத் தான் என்று கூறினார்கள். பேருந்து, கார், ஸ்கூட்டர், சைக்கிளில் சென்றவர்கள் என அனைவரும் கை விரல்களை விரித்து உதய சூரியன் சின்னத்தை காண்பித்து அகமகிழ்ந்தனர்.

சென்ற இடமெல்லாம் வியாபாரப் பெருமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு மலர்கள், சால்வைகள் கொடுத்து அன்புடன் வரவேற்றனர். குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர் அதிகம் வசிக்கும் காசிமேடு பகுதிக்குச் சென்று வாக்குச் சேகரித்தார்.

Label