OUR CLIENTS
லாகூரில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி
லாகூரில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி Posted on 06-Apr-2017 லாகூரில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி

லாகூர், ஏப். 6-
பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 1 லட்சத்து 18 ஆயிரத்து 918 அரசு பணியாளர்களும், அவர்களது பாதுகாப்புக்காக சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று லாகூரில் உள்ள பேடியான் என்ற இடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு, உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதி ஒருவர், ராணுவ வாகனத்துக்கு அருகே சென்று வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த வாகனங்கள் தீயில் கருகி உருக்குலைந்து போயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. குண்டுவெடிப்பில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பு ஏற்றது.

Label