OUR CLIENTS
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர்
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர் Posted on 29-Jul-2016 முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த  31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா முன்னிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.மா.கா., தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல அமைப்புகளில் பணியாற்றி வந்த, 3,500 மகளிர் உட்பட 31,834 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா முன்னிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி, 31,834 பேர் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை ராயப்பேட்டை பகுதிக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத்தொண்டர்களும், பெண்களும் திரண்டுநின்று வாழ்த்து முழக்கங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழகக் கொடிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கக் கொடிகளை கரங்களில் ஏந்தியவாறு, கழகத்தொண்டர்களும், தொழிற்சங்கத்தினரும் சிறப்புமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரை வரவேற்கும் வகையில், கழகக் கொடிகள், தோரணங்கள், வண்ணப் பதாகைகள் ஆகியன சாலையெங்கும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. மங்கள இசை, செண்டை மேளம், Band வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் முழங்க முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா முன்னிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. குமரகுரு, எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. P.R. மணிமாறன், உளுந்தூர்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. K.N. ஜெயராமன், திருக்கோவிலூர் வட்டார த.மா.கா. தலைவர் திரு. S. ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி செயலாளர் திரு. T. மணிகண்டன் உட்பட, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேர், தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். 

கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான திரு. S.P. வேலுமணி ஏற்பாட்டின் பேரில், பா.ஜ.க-வைச் சேர்ந்த கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. S. கணேஷ், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றச் செயலாளர் திரு. கே. உலகநாதன், வால்பாறை ஒன்றிய அழகிரி பாசறைச் செயலாளரும், சிறுவணிக மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவருமான திரு. ஸ்டேன்லரி பிர்நன்சா, தி.மு.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. ப. கதிரேசன், தே.மு.தி.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட துணைச் செயலாளரும், இந்தியா நூற்பாலைகள் சங்கத் தலைவருமான திரு. G. சுப்ரமணியம், ம.தி.மு.க-வைச் சேர்ந்த மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. ஆர். பயனியர் தியாகு மற்றும் நிர்வாகிகள் உட்பட 5 ஆயிரம் பேர், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த கரூர் மாவட்ட அவைத் தலைவர் திரு. பஞ்சப்பட்டி K. பாலன், ம.தி.மு.க-வைச் சேர்ந்த தாந்தோணி நகரச் செயலாளர் திரு. S. சத்தியமூர்த்தி, தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் தெற்கு நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. S. குணசேகரன், காங்கிரசைச் சேர்ந்த கரூர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திரு. S. செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. அக்னி. இல. அகரமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்டச் செயலாளர் திரு. S. கலைராஜன்; தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்டச் செயலாளர் திரு. ஏ.எஸ். முருகேசன் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர், முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். 

அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் வலசை ரவிச்சந்திரன் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, மாநில துணைத் தலைவர் திரு. எம்.பி. கோவிந்தசாமி, பொருளாளர் திரு. ஏ.சி. சோமு உள்ளிட்ட 5 ஆயிரம் பேருடன் கழகத்தில் இணைந்தார். 

அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான திரு. தாமரை S. ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி S.V. சாந்தி, தே.மு.தி.க-வைச் சேர்ந்த அரியலூர் ஒன்றியச் செயலாளர் திரு. S. செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் திரு. R. சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உட்பட 3,000 பேர் - திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை நகர மன்ற 15-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி பி. சாய்ரா பானு, தே.மு.தி.க-வைச் சேர்ந்த மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளரும், காரத்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவருமான திரு. P. சுரேஷ் என்கிற பொன். முத்துலிங்கம், ம.தி.மு.க-வைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு. M. காளிமுத்து மற்றும் பல்வேறு நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்து 100 பேர் -அமைச்சர் திரு. க. பாஸ்கரன் ஏற்பாட்டின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை ஒன்றியம், தமராக்கி தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஏ. அய்யனார், தி.மு.க-வைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும், சிவகங்கை நகர மன்ற 25-ஆவது வார்டு உறுப்பினருமான திரு. G. ராஜபாண்டியன் உட்பட ஆயிரம் பேர் - காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. S. வளையாபதி, தே.மு.தி.க-வைச் சேர்ந்த மாடம்பாக்கம் பேரூராட்சிச் செயலாளரும், பேரூராட்சி மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினருமான திரு. P.S. எத்திராஜ், ம.தி.மு.க-வைச் சேர்ந்த பீர்க்கன்காரணை பேரூராட்சித் தலைவர் திரு. ஜி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரம் பேர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. க. பாண்டியராஜன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த ஆவடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் திரு. கோ. பிரபாகரன் என்கிற தென்றல் மகி, பா.ஜ.க-வைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. ஆர். ராஜாமணி உள்ளிட்ட 1,000 பேர், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தே.மு.தி.க-வைச் சேர்ந்த வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதிச் செயலாளர் திரு. P. முகமதுஜான் மற்றும் மகளிரணியினர் உட்பட ஆயிரம் பேர் -

தே.மு.தி.க-வைச் சேர்ந்த வட சென்னை மாவட்டப் பொருளாளர் திரு. S. வசந்தராமன் மற்றும் இளைஞரணி, மாணவரணிகளைச் சேர்ந்த 500 பேர் -

த.மா.கா-வைச் சேர்ந்த மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினரும், தமிழ் நாடு டெக்ஸ்டைல்ஸ் & கார்மென்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவருமான திரு. ராயபுரம் P.S. சிவா மற்றும் நிர்வாகிகள் 500 பேர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு. அ. அழகு சேர்வை தலைமையில்; மூவேந்தர் முன்னணிக் கழகத்தைச் சேர்ந்த சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. வாணியங்குடி ஓ. போஸ் சேர்வை, தே.மு.தி.க-வைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் திரு. ச. டேவிசன்; மருதுபாண்டியர் அறக்கட்டளையின் சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. க. நாகமுத்து சேர்வை உள்ளிட்ட 12 பேர் -ம.தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் திரு. ரெட்சன் சி. அம்பிகாபதி மற்றும் 10 பேர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

அமைச்சர் திரு. R.B. உதயகுமார் ஏற்பாட்டின் பேரில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. அன்னபூர்ணா T. தங்கராஜ் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி திருமதி N. கண்ணகி ஆகியோர், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை தனித்தனியே நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர். 

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு. R. பாலு ஏற்பாட்டின் பேரில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி SC பிரிவு மாநில அமைப்பாளர் திரு. V.V. மூர்த்தி தலைமையில் 500 பேர் - நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் திரு. பா. வெற்றிச்செல்வன் தலைமையில் 100 பேர் - மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. V.V. ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் திரு. S. வசந்தகுமார், பா.ஜ.க-வைச் சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் திரு. P. கோட்டைச்சாமி; காங்கிரசைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. R. கிருஷ்ணமூர்த்தி; பா.ம.க-வைச் சேர்ந்த மதுரை மாவட்ட துணைத் தலைவரும், அய்யூர் ஊராட்சி மன்றத் தலைவருமான திரு. B. அன்பு; தி.மு.க-வைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் திரு. P. தங்கபாண்டி, த.மா.கா-வைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் திரு. V. ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த உழவர் இயக்க மாநில இணைச் செயலாளர் திரு. அ. ராக்கப்பன் உள்ளிட்ட அக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 400 பேர் - மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. R. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், தமிழ் நாடு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டச் செயலாளர் திரு. பி. வீரணசிங்கம்; தே.மு.தி.க-வைச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் திரு. லயன் திவ்யா எம். ரெங்கன் உள்ளிட்ட 210 பேர் -

திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.S.M. ஆனந்தன் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் திரு. ஆர். சுந்தர்ராஜன், தி.மு.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு. கே. தினேஷ்குமார்; தே.மு.தி.க-வைச் சேர்ந்த அவினாசி ஒன்றியச் செயலாளர் திரு. எம். வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில மாதர் குழு உறுப்பினர் திருமதி எம். ஈஸ்வரி, கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநில அமைப்பாளர் திரு. எஸ்.ஏ. நந்தகுமார், அவிநாசி-அத்திக்கடவு கூட்டமைப்பின் அவினாசி ஒன்றியத் தலைவர் திரு. பி. வேலுசாமி உள்ளிட்ட 204 பேர் -

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தொகுதித் தலைவர் திரு. T.V. மகாலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் ஒன்றிய கரும்பாக்கம் ஊராட்சிச் செயலாளர் திரு. கே. விஜயகுமார் உட்பட 97 பேர் - தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. M. ராம்குமார் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் திரு. H. மின்காஜ், உள்ளிட்ட 52 பேர் -

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. S.V. திருஞானசம்பந்தம் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. சு. முருகன் உள்ளிட்ட 52 பேர் -

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி A.S. மகேஸ்வரி ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த, மாநில துணைத் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான திருமதி பானுமதி கருணாகரன், உள்ளிட்ட 30 பேர் -

ஆர்.எம். வீரப்பன் கட்சியைச் சேர்ந்த, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. து. மதிவாணன் தலைமையில் 20 பேர் -

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவரும், தமிழ் நாடு ராகுல் காந்தி நற்பணி மன்ற மாநிலச் செயலாளருமான திரு. உடையார் S.K. சோமசுந்தரம் தலைமையில் 15 பேர் -

ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.A. முனியசாமி ஏற்பாட்டின் பேரில், ம.தி.மு.க-வைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் திரு. கராத்தே எம். பழனிச்சாமி; தி.மு.க-வைச் சேர்ந்த முதுகுளத்தூர் பேரூராட்சி முன்னாள் செயலாளர் திரு. கே. மோகன்தாஸ்; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழக உழவர் இயக்க மாநில துணை அமைப்பாளர் திரு. பாம்பூர் ம. இருளன்; தி.மு.க-வைச் சேர்ந்த திரு. M. கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றிய மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. ஆர். செல்வன், த.மா.கா. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு. நத்தம் ஆ. ராஜகோபால், சின்னத்திரை நடிகை R. நேத்ரா ஸ்ரீ ஆகியோரும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில், தெற்கு மாவட்ட தேமுதிக-வைச் சேர்ந்த, மாவட்டச் செயலாளர் திரு. செ. தங்கபாண்டியன், வட சென்னை மேற்கு மாவட்ட த.மா.கா. மகளிர் அணித் தலைவர் திருமதி நந்தினி கன்னியப்பன் மற்றும் த.மா.கா. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் 3,500 மகளிர் உட்பட 31,834 பேர், தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தவர்களுக்கு, கழகப் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

தாயுள்ளத்தோடு தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டதற்காக, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு அவர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.



Label