OUR CLIENTS
ஜெயலலிதாவின் பிணத்தை வைத்து பிரசாரம் செய்யும் பன்னீர் செல்வம்: அதிர்ச்சியில் மக்கள்
ஜெயலலிதாவின் பிணத்தை வைத்து பிரசாரம் செய்யும் பன்னீர் செல்வம்: அதிர்ச்சியில் மக்கள் Posted on 07-Apr-2017 ஜெயலலிதாவின் பிணத்தை வைத்து பிரசாரம் செய்யும் பன்னீர் செல்வம்: அதிர்ச்சியில் மக்கள்

சென்னை, ஏப். 7-
ஆர்கே நகர் தொகுதியில் பன்னீர் செல்வம் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து பிரசாரம் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக, அதிமுகவின் இரு அணிகள், சி.பி.எம், நாம் தமிழர் மற்றும் பல்வேறு சுயேட்சைகள் களம் காண்கின்றனர். அனைத்து கட்சியினரும் ஆர்.கே.நகரில் வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா சவப்பெட்டியில் உள்ளது போன்ற பொம்மையை செய்து அதை காரில் வைத்தவாறு ஊர்வலமாகச் சென்று ஓ.பி.எஸ் அணியினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

ஜெயலலிதா சவப்பெட்டியில் உள்ளதுபோன்ற பொம்மையை வைத்து வாக்குசேகரிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Label