OUR CLIENTS
எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை
எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை Posted on 07-Apr-2017 எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை

சென்னை, ஏப். 7-
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் ஆதரவு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருவேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் மையத்திற்கு 3 கார்களில் வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்த பல்வேறு கோப்புகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் இலுப்பூர் அருகே உள்ள அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சோதனையில் காலை 6 மணி முதல் 40 வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையையொட்டி அந்த பகுதிகளில் சி.ஆர்.பி.எப். படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். எம்எல்ஏக்கள் விடுதியில் 5 அறைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Label