OUR CLIENTS
டெப்பி புயலால் நியூசிலாந்தில் வெள்ளப்பெருக்கு...
டெப்பி புயலால் நியூசிலாந்தில் வெள்ளப்பெருக்கு... Posted on 07-Apr-2017 டெப்பி புயலால் நியூசிலாந்தில் வெள்ளப்பெருக்கு...

வெலிங்டன், ஏப். 7-
ஆஸ்திரேலியாவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய டெப்பி புயல், தற்போது நியூசிலாந்தையும் ஒரு கை பார்த்துள்ளது. 

இவ்விரு நாடுகளிலும், இந்தப் புயல் காரணமாக 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் தெற்கு மறறும் வடக்கு தீவுகள் இந்தப் புயல், மழை காரணமாக வெள்ளக்காடாகி உள்ளன. நியூசிலாந்தின் வடக்கு தீவு நகரமான எட்கேகும்பே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வீதிகளில் 6½ அடி ஆழத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது.

அந்நகரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் அனைவரும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அந்த நகருக்குள் மக்கள் மீண்டும் வந்துவிடாத வகையில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். வைக்கட்டோ ஆற்றில் புரண்டோடிய வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டார். பிளண்டி விரிகுடா பகுதியில் கடந்த 36 மணி நேரத்தில் 250 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label