OUR CLIENTS
இந்திய சாதனை பெண்கள்... 2016!
இந்திய சாதனை பெண்கள்... 2016! Posted on 07-Apr-2017 இந்திய சாதனை பெண்கள்... 2016!

சென்னை, ஏப். 7-

கியாரா நர்கின்
கூகுள் நடத்திய 2016-ம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சியில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த, 16 வயதான, இந்திய வம்சாவளி சிறுமி கியாரா நர்கின் முதல் பரிசு பெற்று சாதனை புரிந்துள்ளார். ஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவதன்  மூலம் நிலத்தில் நீரைத் தக்கவைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற முடியும் என்பதே, அவரின் கண்டுபிடிப்பு. பதினொன்றாம் வகுப்புப் படித்து வரும் கியாரா, தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, அறிவியல் கண்காட்சியில் சமர்ப்பித்த அவரின் 'தண்ணீர் இல்லா பயிர்கள் இனி இல்லை' கண்டுபிடிப்புக்கு, கூகுள் அவருக்கு 50, 000 டாலர்கள் பரிசளித்துள்ளது.

இந்திரா நூயி
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயி, பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துவருகிறார். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்ந்தலில் வெற்றிபெற்ற டொனால்டு ட்ரம்ப், தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். அந்த வகையில், அவர் உருவாக்கியுள்ள பொருளாதார ஆலோசனை குழுவில் இந்திரா நூயியும் இடம் பெற்றுள்ளார். இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சவிதா வைத்தியநாதன்
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணான சவிதா வைத்தியநாதன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள குப்பெர்டினா நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நகரில் சுமார் 2 ஆண்டுகளாக வசித்து வரும் சவிதா, எம்.பி.ஏ பட்டதாரி. ஆரம்பகாலத்தில் கணித ஆசிரியையாகப் பணியாற்றியவர், பின்னர் தனியார் வாங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குபெர்ட்டினா நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு அங்குள்ள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

உப்மா விர்தி
ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் 26 வயது உப்மா விர்தி என்ற பெண், ஒரு வழக்கறிஞர். அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரிரேலியாவில் வழக்கறிஞராக பணிபுரிந்துகொண்டே அங்கு வாழும் இந்தியர்களுக்கு ருசியான டீ தயாரித்து விற்பனை செய்யும் 'சாய் வாலி' (Chai Walli)' என்ற கடையைத் தொடங்கினார். இவரின் தாத்தா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவரிடம் ஹெர்பல் டீ தயாரிக்க கற்றுக்கொண்டு இவர் கடை ஆரம்பிக்க, அதன் ருசியும், மணமும் மக்களிடையே பிரபலம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிட்னி நகரில் நடந்த இந்திய - ஆஸ்திரேலிய பிசினஸ் மற்றும் கம்யூனிட்டி அவார்ட்ஸ் (IABCA) அமைப்பு, இவருக்கு 'சிறந்த பிசினஸ்வுமன் 2016' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உப்மா, சண்டிகரில் பிறந்தவர்.

ப்ரித்தி பட்டேல்
இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, தெரசா மே பிரதமராக பொறுப்பேற்றார். இவருடைய தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் இந்தியா வம்சாவளி பெண் ப்ரித்தி பட்டேல் சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். 44 வயதான இவர் குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

Label