OUR CLIENTS
65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஸ!
65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஸ! Posted on 07-Apr-2017 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஸ!

சென்னை, ஏப். 7-
நிவின்பாலி நடித்து வரும் `சகாவு' படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் 65 வயது பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார்.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அதிகம். இப்போது தமிழ் நாட்டில் இருந்து மலையாள பட உலகுக்கு சென்று பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மலையாள படங்களில் நடிக்கும் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடங்கள் அமைந்து வருகின்றன. கடந்த ஜனவரியில் வெளியான ‘ஜோமோண்டே சுவிசே‌ஷங்கள்’ மலையாள படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். 

இதில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. அடுத்து, நவின்பாலியுடன் ஜஸ்வர்யா நடித்துள்ள மலையாள படம் ‘சகாவு’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இரண்டு கெட்-அப்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று 65 வயது பெண் வேடம். இதற்கான நடிப்பை சிறப்பாக அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Label