OUR CLIENTS
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை Posted on 08-Apr-2017 அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், ஏப். 8-
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் விக்ரம் ஜயால் (26) என்னும் இளைஞர் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.

விக்ரம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், நேற்று விக்ரம் பங்கில் தனது வேலையை செய்து வந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், கடையில் இருந்த பொருட்களையும், பணத்தையும் தருமாறு கேட்டுள்ளனர்.

விக்ரமும் பயந்து பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, விக்ரமை துப்பாக்கி சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் விக்ரமை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறந்தவருக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Label