OUR CLIENTS
பன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்: நடிகை விஜயசாந்தி!
பன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்: நடிகை விஜயசாந்தி! Posted on 08-Apr-2017 பன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்: நடிகை விஜயசாந்தி!

சென்னை, ஏப். 8-
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து நடிகை விஜயசாந்தி பிரசாரம் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. அம்மா கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியை மக்கள் ஒதுக்கி விட்டனர். ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டு வெளியேறி உள்ளார். அவர் வாயில் உண்மையே வரவில்லை. அவரது பேச்சை நம்பாதீர்கள்.

அவருக்கு மட்டும்தான் அம்மா மீது பாசம் இருப்பது போலவும் மற்றவர்களுக்கு பாசம் இல்லாதது போலவும் ரொம்ப நடிக்கிறார். அவரைப்போல் நடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு கர்நாடகா கீழ்கோர்ட்டு தண்டனை விதித்தது. அப்போது அந்த விசயத்தை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். வருத்தப்பட்டோம். ஆனால் வருத்தப்படாத ஒருவர் யார் என்றால் அது ஓ.பன்னீர் செல்வம்தான்.

அவர் வெளியில் ஒன்று பேசுகிறார். உள்ளே ஒன்று நடிக்கிறார். அம்மாவுக்கு தண்டனை கிடைத்த போது இனிமேல் அம்மா ஜெயிலில் இருப்பாங்க. இனி நான் தான் முதல்-அமைச்சர் என்று நினைத்தார். இதற்காக அவருடன் சுற்றி இருப்பவர்களை அழைத்து பெரிய 5 ஸ்டார் ஓட்டலில் பார்ட்டி கொடுத்தார். இது உண்மை. இப்படிப்பட்டவரா அம்மாவுக்கு விசுவாசி?

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் இந்த விசயம் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி வைத்தார். அதன் பிறகு அம்மா இறந்ததும் சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை வந்தது. இதற்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஓ.பன்னீர் செல்வம் கொண்டாடி இருக்கிறார். இவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும்? உண்மையிலேயே அவர் வருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது ஒருபடி மேலே போய் அம்மா மரணத்தில் மர்மம் என்கிறார். அவருக்கு எங்கிருந்து வந்தது. இந்த வார்த்தை என்ன மர்மம் இருக்கிறது? மத்திய அரசு மோடி, எய்ம்ஸ் டாக்டர்களை அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர். அனைத்து தகவலும் மோடிக்கு தெரியும். என்ன நடந்தது என்று அவருக்கு ரிப்போர்ட் சென்றது. இல்லை என்றால் அவர் சும்மா விடுவாரா?

இவ்வாறு நடக்கும் போது அப்போது ஒன்றும் பேசாத ஓ.பன்னீர்செல்வம் இப்போது அம்மா மரணத்தில் மர்மம் என்கிறார். அம்மா மரணத்தை அரசியலாக்கப் பார்க்கிறார். யாரும் ஏமாத்தவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பொய் பேசுகிறார். அதுமட்டுமல்ல அம்மா சவப்பெட்டியை எடுத்து வந்து மானத்தை வாங்குகிறார். அவர் ஜெயிக்க இப்படிப்பட்ட கீழ்த்தரமான யோசனையா வரணும்?

இப்படிப்பட்ட ஆளை நம்பாதீர்கள். இதை சொல்லத்தான் ஐதராபாத்தில் இருந்து வந்தேன். இன்றைக்கு அ.தி.மு.க. கட்சிக்கு பிரச்சனை இருக்கு. இப்படி பிரச்சனை இருக்கும் போது நீங்கள் மறுபடியும் ஆதரிக்கனும். ஜெயிக்கவைக்க வேண்டும். ஆனால் துரோகிகளை நம்பாதீர்கள் என்று அவர் பேசினார்.

Label