OUR CLIENTS
சுற்றுலா தீவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் பலி... பிலிப்பைன்ஸ்!
சுற்றுலா தீவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் பலி... பிலிப்பைன்ஸ்! Posted on 11-Apr-2017 சுற்றுலா தீவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் பலி... பிலிப்பைன்ஸ்!

மணிலா, ஏப். 11-
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தீவு ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போஹோல் என்ற சுற்றுலா தீவுப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவத்திற்கு, தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. அபு சய்யப் என்ற கடத்தல் குழுவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தீவுக்குள் நுழந்து தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தொடர்ச்சியாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்த குழு, முதல் முறையாக தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு தீவிரவப்படுத்தப்பட்டுள்ளதோடு, பிலிப்பைன்ஸ் போலீசார் தரப்பில் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Label