OUR CLIENTS
அமெரிக்க கவர்னருக்கு ஜெயில்!
அமெரிக்க கவர்னருக்கு ஜெயில்! Posted on 12-Apr-2017 அமெரிக்க கவர்னருக்கு ஜெயில்!

மாண்ட்கோமரி, ஏப். 12-
தேர்தல் செலவுக் கணக்கு முறையாகக் காட்டாத அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி க்கு ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொருளாதார ரீதியான தொடர்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதி விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந் நிலையில் அவரை மாண்ட்கோமரி கவுண்டி ஜெயிலில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டவுடன் தானாக முன்வந்து பதவி விலகியுள்ளார். கவர்னர் பங்களாவில் கள்ளக் காதலியுடன் கூத்தடித்தும் உள்ளார். முன்னாள் அரசியல் ஆலோசகர் ரெபேக்கா கால்டுவெல் மேசனுடன் பென்ட்லிக்கு உள்ள தொடர்பு கவர்னர் பங்களாவில் வெளிப்படையான ரகசியமாம்.

அவருடைய காதல் விவகாரம் வெளியே வரவிடாமல் தடுப்பதற்காக, அரசு அதிகாரிகள் மூலம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அரசுப் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பதவி விலகிய பென்ட்லி, தான் சில வேளைகளில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை, தவறுகள் செய்துள்ளேன்., சில நேரங்களில் நான் சரியாக செயலாற்றவில்லை என்றாலும், எப்போதும் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்துள்ளேன். கவர்னர் பதவியை விட்டு இறங்குகிறேன். மற்ற முக்கியமான சேவைகள் செய்ய தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

74 வயது நிரம்பிய பென்ட்லி, அமெரிக்கன் ஏர் ஃபோர்ஸில் மெடிக்கல் ஆபீசராக பதவி வகித்து கேப்டனாக ஒய்வு பெற்றவர். பின்னர் எம்.டி பட்டப்படிப்பு படித்து தெற்கு அமெரிக்கா முழுவதும் தோல் சம்மந்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைகள் நடத்தி வந்தார்.

ஏழு வருடங்கள் கவர்னராக இருந்தாலும், சட்டத்திற்கு முன் அவரால ஒன்றும் செய்யமுடியவில்லை. கிடுக்கிப் பிடியில் சிக்கி பதவி விலகியுள்ளார்.

தேர்தல் கணக்கு காட்டவில்லை, சொத்துக்கள் கணக்கு காட்டவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யும் விசாரணையும், அதைத் தொடர்ந்த ஜெயில் தண்டனையும் இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று!. கவர்னர் பதவி விலகியதால் இடைத் தேர்தல் எல்லாம் கிடையாது. துணை கவர்னர் கே ஐவி மீதிக் காலத்திற்கு கவர்னராக பதவி வகிப்பார்.

Label