OUR CLIENTS
மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்தது... 7 தொழிலாளர்கள் பலி!
மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்தது... 7 தொழிலாளர்கள் பலி! Posted on 12-Apr-2017 மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்தது... 7 தொழிலாளர்கள் பலி!

மெக்சிகோ, ஏப். 12-
மெக்சிகோவில் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டும் வேலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கான்கிரீட் உத்திரத்தை கட்டுமானத்தின் மீது வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் எதிர்பாராத வகையில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்தன. அதனுள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக தீயணைக்கும் படையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் கான்கிரீட் பலகைகள் அமுக்கியதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததால், அவர்களை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

Label