OUR CLIENTS
அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு Posted on 30-Jul-2016 அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு

அமெரிக்கா:
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 25 முதல் 29-ம் தேதி வரை பிரபல செய்தி நிறுவனமான ‘ரியூட்டர்ஸ்’ நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரி வாக்காளர்கள் பங்கேற்று தங்களது மனதுக்கு பிடித்த அதிபர் பதவிக்கான வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

இதில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐவிட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமான ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்கள் உள்ள நிலையில் ஹிலாரியின் பிரசார வியூகத்தால் ஆதரவு சதவீதம் அதிகரிக்கலாம். பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் அவர் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றுவார் என்று கருதப்படுகிறது.

Label