OUR CLIENTS
அம்பேத்கர் பிறந்தநாள் : குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாள் : குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மரியாதை Posted on 15-Apr-2017 அம்பேத்கர் பிறந்தநாள் : குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மரியாதை

புதுதில்லி, ஏப். 15-
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  பாராளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர்  நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

‘அம்பேத்கர் ஜெயந்தியை முன்னட்டு, மதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவோம். ஜெய் பீம்’ என மோடி டுவிட் செய்துள்ளார்.

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று நாக்பூர் செல்கிறார். அம்பேத்கர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் புத்தமதத்தை தழுவிய புனித தலமான தீக்‌ஷ பூமியில் மோடி பிரார்த்தனை செய்கிறார்.

Label