OUR CLIENTS
சம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி!
சம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி! Posted on 15-Apr-2017 சம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி!

சென்னை, ஏப். 15-
சிவகார்த்திகேயனுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து முன்னணி ஹீரோக்கள் விஜய், தனுஷ் உடன் ஜோடி போட்டார்.

சில படங்கள் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தையும் படிப்படியாக உயர்த்தி 2 கோடி கேட்க தொடங்கினார். தெலுங்கில் ஒன்றரை கோடி சம்பளம் பெற்றுவந்தார். நேனு லோக்கல் படம் ஹிட்டானதையடுத்து அங்கு மார்க்கெட் சூடுபிடித்தது. சமீபத்தில் பவன் கல்யாண் மற்றும் திரிவிக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுடன் பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்திலும் நடிக்கிறார்.

தமிழிலும் இப்படம் உருவாகிறது. இருமொழியில் ஒரேநேரத்தில் உருவாவதால் இரண்டுக்கும் சேர்த்து  3 கோடி சம்பளம் தர வேண்டும் என கேட்டார் கீர்த்தி. அதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் கிரீன்சிக்னல் கிடைத்ததால் தெம்பானார்.

இதையே காரணமாக சொல்லி தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம், நான் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழியில் ரிலீஸ் செய்யலாம் என்பதால் 3 கோடி சம்பளம் தரவேண்டும் என்று மற்ற தயாரிப்பாளர்களிடமும் கேட்க தொடங்கி உள்ளாராம்.

அனுஷ்காதான் 3 கோடியை தொட்டிருக்கிறார். மற்ற நடிகைகள் இன்னும் அந்த இடத்தை எட்ட முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் குறுகியகாலத்தில் கீர்த்தியின் இந்த டெக்னிக் சக நடிகைகளை யோசிக்க வைத்திருக்கிறது.

Label