OUR CLIENTS
ரேவதி இயக்கும் படம் தமன்னா திடீர் விலகல்!
ரேவதி இயக்கும் படம் தமன்னா திடீர் விலகல்! Posted on 15-Apr-2017 ரேவதி இயக்கும் படம் தமன்னா திடீர் விலகல்!

சென்னை, ஏப். 15-
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த படம் குயின். கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிறந்த நடிப்புக்காக கங்கனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது.

தமிழில் இயக்குனர் பொறுப்பை நடிகை ரேவதி ஏற்றார். கங்கனா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. சம்பளம் அதிகம் கேட்டதால் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. இறுதியாக தமன்னா நடிக்க சம்மதித்தார். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தமன்னாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க தொடர்ச்சியாக ஒப்புக்கொண்டு வருகிறார்.

இதையடுத்து குயின் படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது, ‘குயின் தமிழ் ரீமேக் கைவிடப்பட்டது உண்மைதான். சமீபத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இதுபற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

அதற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைக்காமலிருந்தது. பாகுபலி படத்துக்கு பிறகு ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள நிறைய படங்களில் நான் நடிக்கிறேன். அதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு நிறைய வந்துக்கொண்டிருக்கிறது’ என்றார்.

Label