OUR CLIENTS
உதிரி பாகங்களை வாங்கி சொந்தமாக ஐபோன் தயாரித்து இளைஞர் அசத்தல்!
உதிரி பாகங்களை வாங்கி சொந்தமாக ஐபோன் தயாரித்து இளைஞர் அசத்தல்! Posted on 15-Apr-2017 உதிரி பாகங்களை வாங்கி சொந்தமாக ஐபோன் தயாரித்து இளைஞர் அசத்தல்!

பெய்ஜிங், ஏப். 15-
சீனாவில் உள்ள மின்னணு சாதனங்கள் விற்கும் கடைகளில் தனித்தனியாக மொபைல் பாகங்களை பெற்றுக் கொண்டு தனக்கான பிரத்யேக ஐபோனை இளைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில் சிலிக்கான்வேலியில் பொறியாளராக பணியாற்றுபவர் ஸ்காட்டி ஆலன். சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஐபோனை அசம்பிள் செய்வதற்கான யோசனையை தெரிவத்தார்.

ஏற்கெனவே ஸ்காட்டி ஐபோன் 6 எஸ் மாடலை பயன்படுத்தி வருவதால் அந்த மாடலையே தயாரிக்க திட்டமிட்டார். இதனால் அவர் அவர் சீனாவில் ஷான்ஷென் பகுதியில் உள்ள மின்னணு கடைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரிபாகங்களை வாங்கி அவற்றை அசம்பிள் செய்து புதிய ஐபோனை உருவாக்கியுள்ளார்.

ஐபோனை தயாரிக்க திரை, ஷெல், பேட்டரி மற்றும் லாஜிக் போர்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினார். லாஜிக் போர்டினை முழுமையாக தயாரிக்க முடியாது என்பதால் அதை முழுமையாக வாங்கி விட்டார். இத்துடன் போன் பேட்டரியை இந்திய மதிப்பில் ரூ.322-க்கு வாங்கினார். மேலும் ஐபோனை தயாரிப்பது குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

Label