OUR CLIENTS
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்... காலிறுதியில் மரின் கரோலினாவிடம் பி.வி. சிந்து தோல்வி!
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்... காலிறுதியில் மரின் கரோலினாவிடம் பி.வி. சிந்து தோல்வி! Posted on 15-Apr-2017 சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்... காலிறுதியில் மரின் கரோலினாவிடம் பி.வி. சிந்து தோல்வி!

சிங்கப்பூர், ஏப். 15-
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை கரோலினா 21-&11 என எளிதில் கைப்பற்றினார். பி.வி. சிந்து 2-வது செட்டில் கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோலினா 21-&15 என எளிதில் கைப்பற்றி, 2-0 என வெற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் கரோலினாவிடம் தோல்வியடைந்த பி.வி. சிந்து, சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் கரோலினாவை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்று பி.வி. சிந்து தோல்வியடைந்துள்ளார்.

Label