OUR CLIENTS
அமெரிக்காவில் ஏர் பலூன் தீப்பிடித்து விபத்து - 16 பேர் உயிரிழப்பு ?
அமெரிக்காவில் ஏர் பலூன் தீப்பிடித்து விபத்து - 16 பேர் உயிரிழப்பு ? Posted on 31-Jul-2016 அமெரிக்காவில் ஏர் பலூன் தீப்பிடித்து விபத்து - 16 பேர் உயிரிழப்பு ?

டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏர் பலூன் ஒன்று அதிக வெப்பத்தால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இருந்த 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் 16 பேருடன் வானில் பறந்த சூடான காற்று பலூன், தீடிரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7.45 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. பலூன் விபத்துக்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த பகுதியில் இருந்த உயர் அழுத்த வயரில் ஏர் பலூன் பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

Label