OUR CLIENTS
இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.1.3 கோடி லஞ்சம்... டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு!
இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.1.3 கோடி லஞ்சம்... டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு! Posted on 17-Apr-2017 இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.1.3 கோடி லஞ்சம்... டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு!

புதுதில்லி, ஏப். 17-
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரா தொழிலதிபர் என கூறப்படுகிறது. இவரிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். 

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். 

இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Label