OUR CLIENTS
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை! Posted on 17-Apr-2017 ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை!

புதுதில்லி, ஏப்.17-
சமீபத்தில், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளும் பிரதமரைச் சந்தித்தன. சசி தரப்பிலிருந்து தம்பிதுரையும், பன்னீர் தரப்பிலிருந்து, மைத்ரேயனும், மோடியை டில்லியில் சந்தித்தனர்.அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து, தம்பிதுரை பேசியதாக கூறப்படுகிறது.

பன்னீர் தரப்பிலிருந்து பேசும் போது, அவர்களது கோஷ்டிக்கு மத்தியஅரசு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டது.’தேர்தல் ரத்து பெரியஅடியாயிற்றே’ என்ற மோடி, ‘பன்னீர், சென்னையிலேயே உட்கார்ந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது; ஊர் ஊராக சென்று, மக்களைசந்திக்கச் சொல்லுங்கள்’ என, மைத்ரேயனிடம்,’அட்வைஸ்’ கொடுத்தாராம் மோடி.

‘தமிழகத்தின் பல இடங்களில் கூட்டம் போடுவது, கிராமங்களில்மக்களைச் சந்திப்பது என அதிரடியாக, பன்னீர் பணியாற்ற வேண்டும்; இதை, நான் கூறியதாக,அவரிடம் சொல்லுங்கள்’ என்றாராம்.

சசிகலா கோஷ்டிக்கு எதிராக மத்திய அரசு இருந்தாலும்; ஜனாதிபதி தேர்தலில், அவர்கள், பா.ஜ., நிறுத்தும் வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பரா என்ற சந்தேகம், பா.ஜ., தலைவர் களுக்கு உள்ளது.இவர்களின் ஆதரவைப் பெற, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மூலம் முயற்சி செய்து வருகிறது, பா.ஜ., மேலிடம்.

Label