OUR CLIENTS
அமைச்சர்கள் போர்க்கொடி... பன்னீர் அணி உற்சாகம்!
அமைச்சர்கள் போர்க்கொடி... பன்னீர் அணி உற்சாகம்! Posted on 17-Apr-2017 அமைச்சர்கள் போர்க்கொடி... பன்னீர் அணி உற்சாகம்!

சென்னை, ஏப். 17-
முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், தினகரனுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருப்பது, பன்னீர் அணியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘சசிகலா குடும்பம், தேவையில்லாத மூட்டை. அதை தூக்கி சுமக் காதீர்கள் என, கூறுகிறோம். அங்குள்ள அமைச் சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிந்திக்க வேண்டும்‘ என்றார்.இது, சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சசிகலா குடும்பத்தால் தான் கட்சி பிளவுபட்டது.  தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் பணத்தை வாரி இறைத்ததால், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.எனவே, தினகரனை விலக்கி விட்டு, பன்னீர் அணியை இணைத்துக் கொண்டால், ஆட்சியையும், கட்சியையும் தக்கவைத்துக் கொள்ள லாம். இரட்டை இலை சின்னத்தை மீட்கலாம் என்ற எண்ணம், சசிகலா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவர்கள் நேரடியாக, தினகரனை ஒதுங்கிக் கொள்ளும்படி, வலியுறுத்தத் துவங்கி உள்ளனர். இது, பன்னீர் அணியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத்தால், கட்சிக்கும்,ஆட்சிக்கும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது.

இதை உணர்ந்த அமைச்சர் கள், தினகரனை நேரில் சந்தித்து, ‘கட்சியை விட்டு விலகுங்கள்’ என, கூறியுள்ளனர்.அதேபோல, சசிகலாவுக்கு, 22 அமைச்சர்கள் கையெழுத்திட்டு, கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், ‘உங்களையும், உங்களால் துணைபொதுசெயலராக நியமிக்கப்பட்ட தினகரனை யும், மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. உங்கள் குடும்பத்தால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது; ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

Label