OUR CLIENTS
கேரள கழிவுகளில் காசு பார்க்கும் போலீஸ்!
கேரள கழிவுகளில் காசு பார்க்கும் போலீஸ்! Posted on 17-Apr-2017 கேரள கழிவுகளில் காசு பார்க்கும் போலீஸ்!

சென்னை, ஏப்.17-
‘தமிழக எல்லை பகுதிகளில், கேரள இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதற்கு, போலீஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே காரணம்‘ என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலத்தில், துர்நாற்றம் ஏற்படுத்தும் கழிவுகளை, திறந்தவெளியில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கொட்டினால், அபராதம் விதிக்கப்படுவதோடு, லாரி ஓட்டுனரின் உரிமமும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதனால், தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில், சாலை ஓரம் மற்றும் நீர்நிலை பகுதிகளில், கேரள இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. 

சமீபத்தில், தென்காசியை அடுத்த, இலஞ்சி முதல் குத்துக்கல் வலசை வரை உள்ள, கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், விவசாய நிலம் மற்றும் நீர்நிலை பகுதிகளில், கேரள மாநில இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் கொட்டப்பட்டன. இது, அப்பகுதி விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.கேரள லாரிகளில் ஏற்றி வரப்படும் இந்த கழிவுகள், இரவு நேரத்தில் கொட்டப்படுகின்றன. அந்த பகுதிவாசிகள், லாரிகளை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என, புகார் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னையை தடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், போலீஸ் துறைகள் என, அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஆனால், சில துறையை சார்ந்தவர்கள், இந்த அத்துமீறலை தடுக்க முனைவதில்லை; அவர்களால் தான், இப்பிரச்னை நீடிக்கிறது. 

கேரள லாரி ஓட்டுனர்கள், எல்லைப் பகுதியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சியினர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை கவனிக்கின்றனர். இதனால், தமிழக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், இதை தடுப்பதில்லை. இப்பிரச்னை குறித்து, தமிழக தலைமைச் செயலர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்வு காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label