OUR CLIENTS
கட்சி பிளவு எதிரொலி ஜெ., சிலைகள் தேக்கம்!
கட்சி பிளவு எதிரொலி ஜெ., சிலைகள் தேக்கம்! Posted on 17-Apr-2017 கட்சி பிளவு எதிரொலி ஜெ., சிலைகள் தேக்கம்!

சேலம், ஏப்.17-
அ.தி.மு.க., இரண்டாக உடைந்ததால், ஜெயலலிதா சிலையை வைப்பதில், கட்சி நிர்வாகிகளிடையே ஆர்வம் குறைந்து விட்டது. இதனால், ஏராளமான சிலைகள், விலை போகாமல் சிற்ப கூடங்களில் தேங்கி உள்ளன.

அ.தி.மு.க., பொது செயலராகவும், முதல்வராகவும் பதவி வகித்தவர், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், கட்சியையும், தொண்டர்களையும், கட்டுக்கோப்புடன் வழி நடத்தினார். 2016, டிச., 5ல், ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பின், அவருக்கு சிலை வைப்பதற்கு, அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டினர். சிமென்ட் சிலைகளை, மிக நேர்த்தியாக வடிவமைத்து கொடுக்கும், சிற்ப கலைஞர்களை தேடிச் சென்று, ஜெயலலிதா சிலைக்கு, ‘ஆர்டர்’ கொடுத்தனர்.

ஏராளமான சிற்ப கலைஞர்கள், தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சிலை வைக்கப்படும் என்ற நம்பிக்கையில், அவரது முழு உருவச்சிலைகளை, அதிக அளவில் வடிவமைத்து, வர்ணம் தீட்டி வைத்துள்ளனர். இதற்கிடையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க.,வையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

ஜெயலலிதா இறந்ததும், அவரது நினைவாக அவருக்கு முழு உருவச்சிலை வைக்க ஆர்வம் காட்டிய, அ.தி.மு.க.,வினர், தற்போது, இரு அணிகளுக்கும் பிரிந்து சென்று விட்டனர். இதனால், ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாமல், கைவிட்டுள்ளனர். அ.தி.மு.க.,வினரை நம்பி, ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைகளை வடிவமைத்து வைத்துள்ள சிற்ப கலைஞர்கள், அவற்றை விற்பனை செய்ய முடியாததால், கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, சேலம் மாவட்டம், ஆத்து£ர் சிற்ப கலைஞர் வரதராஜன் கூறியதாவது: என் சிற்ப கூடத்தில் இருந்து, கடலு£ர், கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க.,வினர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.

தற்போது, அ.தி.மு.க., இரண்டாக உடைந்ததால், ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க ஆர்வம் காட்டவில்லை. என் சிற்ப கூடத்திலும், வடிவமைத்த ஜெயலலிதா சிலைகள் விலை போகாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Label