OUR CLIENTS
சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குகிறது... செம்மலை!
சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குகிறது... செம்மலை! Posted on 19-Apr-2017 சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குகிறது... செம்மலை!

நாமக்கல், ஏப். 19-
நாமக்கல்லில் சசிகலா அணி மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா கழகத்தில் இணையும் விழா நடந்தது.

இந்த விழாவுக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செம்மலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராசிபுரத்தில் நடந்த விழாவில் 3 ஆயிரம் பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைத்துக் கொண்டனர். தற்போது இங்கு நடைபெறும் விழாவில் 3,500 பேர் இணைத்து உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது எப்படி ஆட்சி நடக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வருங்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தூய்மையான ஆட்சியை தருவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்கி வருகிறது. அதனால் தான் சசிகலா சிறைக்கு சென்று உள்ளார். தற்போது தினகரன் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளார். தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் நிலையில் அமைச்சர்கள் இல்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Label