OUR CLIENTS
4 வேட சிம்பு படம்!
4 வேட சிம்பு படம்! Posted on 19-Apr-2017 4 வேட சிம்பு படம்!

சென்னை, ஏப். 19-
சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் ‘பாகுபலி’ பாணியில் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளியாகிரது.

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

அதாவது, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’  இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறதாம். ‘பாகுபலி’ பாணியில் ஒரு பாகத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தை ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியிடவுள்ளார்களாம். 

சிம்பு ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த செய்தி இரட்டை விருந்தாகத்தான் இருக்கும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். 

Label