OUR CLIENTS
அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை!
அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை! Posted on 21-Apr-2017 அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை!

சென்னை, ஏப். 21-
அதிமுகவின் இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுகவின் சின்னம் பறிபோய் விடும் என்ற பயத்தால் டிடிவி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அணியும் ஒன்று கூடலாம் என திட்டமிட்டது.

ஆனால் ஓபிஎஸ் அணி 2 நிபந்தனை விதித்ததோடு சசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமா கடிதம் வாங்கியே தீர வேண்டும் என்று கடுமை காட்டியது. ஓபிஎஸ் அணியின் புதுப்புது நிபந்தனைகளால் திணறிப் போயுள்ளனர் எடப்பாடி அணியினர். 

இந்நிலையில் கட்சியினரின் கருத்தை கேட்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் முதல்வர் எடப்பாட்டிக்கே உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்நடைபெறும் என்று தெரிகிறது. 

மேலும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளுக்கு தலைமை அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் கூட்டியுள்ள இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவு வெளியாகும் என்று சொல்லப்படுவதால், அதிமுக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Label