OUR CLIENTS
மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்... வெனிசுலா!
மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்... வெனிசுலா! Posted on 21-Apr-2017 மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்... வெனிசுலா!

வெனிசுலா, ஏப். 21-
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை ஆட்சிப் பொறுப்பில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகப்பேறு மருத்துவமனை மீது இன்று ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கிருந்த 54 குழந்தைகள் உள்ளிட்ட தாய்மார்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக வெனிசுலா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்சி ரோட்ரிகஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெனிசுலா நாட்டில் உள்ள எந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர் பலி ஏதும் உண்டா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Label