OUR CLIENTS
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை! Posted on 21-Apr-2017 ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!

புதுதில்லி, ஏப். 21-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டியதாகவும், ஆட்களை சேர்த்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அசார் அல் இஸ்லாம் (24), மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது பர்கான் ஷாயிக் (25) மற்றும் அட்னன் ஹசன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அபுதாபியில் இருந்து டெல்லி திரும்பிய அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசார் அல் இஸ்லாம், முகமது பர்கான் ஷாயிக் இருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், திருந்தி வாழ்ந்து மைய நீரோட்டத்தில் இணைய விரும்புவதாக கூறினார்கள். 

இதையடுத்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி, குற்றத்தை ஒப்புக்கொண்ட அசார் அல் இஸ்லாம், முகமது பர்கான் ஷாயிக் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதாக அறிவித்தார். ஹசன் மீதான வழக்கு இதே நீதிமன்றத்தில் தனியாக நடைபெறும் என அறிவித்தார்.

Label